'மார்க் ஆண்டனி' படத்தின் அடுத்த கட்ட பணியை தொடங்கிய விஷால்.. மாஸ் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பணி தொடங்கி உள்ளதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
’மார்க் ஆண்டனி’ படத்தின் டப்பிங் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளதாகவும் முதல் கட்டமாக விஷால் தனது பகுதியின் டப்பிங் பணியை செய்துள்ளதாகவும் தெரிகிறது. நடிகர் விஷால் டப்பிங் செய்யும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த மாஸ் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டைம் டிராவல்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படம் இதுவரை இல்லாத அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் புதுவித அனுபவத்தை உணர்வார்கள் என்று பல குழுவினர் தெரிவித்துள்ளனர்
விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
Dubbing @ full swing for #MarkAntony
— Vishal (@VishalKOfficial) July 9, 2023
Worldwide from #VinayagarChathurthi @Adhikravi pic.twitter.com/62p7pAVQb3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments