விஷாலின் 'மருது' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Wednesday,May 11 2016]

குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையாவின் அடுத்தபடமான 'மருது' திரைப்படம் மே 20ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'U/A சர்டிபிகேட் அளித்துள்ளனர். 'U/A சர்டிபிகேட் பெற்றுள்ளதால் 'மருது' படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கை பெறும் தகுதியை இழக்கின்றது. இதனால் தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் இருப்பினும் திட்டமிட்டபடி வரும் 20ஆம் தேதி படம் வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

More News

அஜித்-சிவா கூட்டணியில் மீண்டும் இணைவாரா பிரபல நடிகர்?

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

முத்தையாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. விஷால் உறுதி

'குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா அடுத்து இயக்கியுள்ள 'மருது' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது.....

அன்னையர் தினத்தில் விஷால் செய்த மகத்தான பணி

நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்ட தினம் முதல் அவர் நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி கஷ்டப்படும் பொதுமக்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை தனது சொந்த பணத்தின் மூலமும், டிரஸ்ட் மூலமும் செய்து வருகிறார். அவருடைய சமூக சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்....

விஷால்-ராதாரவி சந்திப்பில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின்போது அரசியல்வாதிகளுக்கு இணையாக போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ததை பார்த்தோம்....

விஷால்-தமன்னாவின் 'கத்திசண்டை' தொடங்கியது

விஷால் நடித்த 'மருது' திரைப்படம் வரும் 20ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.....