முருகதாஸ் 'நீட்' சப்ஜெட்டையும் தொட்டுருவார்னு நினைக்கிறேன்: விஷால்
- IndiaGlitz, [Sunday,September 10 2017]
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ் படமான 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரபல தமிழ் நடிகர்களின் விழா போன்று பிரமாண்டமாக நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னணி நடிகர்கள் அனைவருமே மகேஷ்பாபுவை தமிழ் இண்டஸ்ட்ரிக்கு வரவேற்பதாகவும், அவரை நிச்சயம் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கூறினர்.
இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால், 'ஏ.ஆர்.முருகதாஸ் மிகச்சிறந்த இயக்குனர். ரமணா முதல் கத்தி வரை சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை அழகாக படம் ஆக்கியவர். தயவு செஞ்சு மீண்டும் பாலிவுட்டுக்கு போகாதீங்க.. தற்போது நிலவும் பிரச்னை குறித்து படம் எடுங்க... நீங்க அதை ஏற்கெனவே ஐடியா பண்ணிருப்பீங்க என்று கூறினார்
அப்போது இடைமறித்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சதீஷ், 'அவர் என்ன படம் எடுக்க வேண்டும் என்று 'நீட்'டா சொல்லுங்க என்று கூற, 'அவர் அந்த சப்ஜெட்டையும் தொட்டுருவார்ன்னு நினைக்கின்றேன், அதுமட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கு 'நீட்' வேண்டும் என்பதையும் சொல்லி கொடுப்பார்' என்று கூறினார்.
தற்போது கொளுந்துவிட்டு எரியும் நீட் பிரச்சனை குறித்து முருகதாஸ் கண்டிப்பாக படம் எடுப்பார் என்று ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நம்பிக்கை தெரிவித்தனர்.