நானும் கார்த்தியும் ரூ.10 கோடி நிதியளிப்போம். அடிக்கல் நாட்டு விழாவில் விஷால்
Friday, March 31, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா இன்று தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பெருந்திரளாக திரண்டு கலந்து கொண்டனர். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் முதற்கல்லை வைத்து விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது:
நடிகர் சங்க புதிய கட்டடத்தால் நலிந்த கலைஞர்கள் பயன்பெறுவார்கள். நடிகர் சங்கம் கட்டடம் கட்ட நானும், கார்த்தியும் இணைந்து ரூ.10 கோடி நிதி அளிக்க உள்ளோம். நடிகர் சங்கத்தின் வளர்ச்சியையும் எங்களது முயற்சியையும் யாராலும் தடுக்க முடியாது; மீறி யாராவது தடுத்தால் ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம்.
இங்கே சாரதா, வாணிஸ்ரீ போன்ற மூத்த கலைஞர்கள் வந்துள்ளார்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள். இந்த கட்டிட விவகாரத்தில் ஒரு ரூபாய் கூட முறைகேடு நடக்காது. கார்த்தி ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருப்பதால் வரவில்லை. ரஜினி மற்றும் கமல் ஆகியோர் 11.30 மணிக்கு வரவுள்ளனர்.
மேலும் இந்த கட்டிடத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடக்கும். வரும் 2018 செப்டம்பரில் நடிகர் சங்க புதிய கட்டடம் திறக்கப்படும். திறப்பு விழாவின்போதும் இதேபோன்று ஒரு விழா நடத்தப்படும்' என்று விஷால் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments