என்னை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. அதிமுக, திமுகவுக்கு விஷால் கோரிக்கை..!

  • IndiaGlitz, [Monday,April 22 2024]

அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, மக்களுக்கு நல்லது செய்யுங்கள், நீங்கள் மக்களுக்கு நல்லது செய்தால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வர போகிறோம், 2026 ஆம் ஆண்டு என்னை அரசியலுக்கு வரவிடாமல் மக்களுக்கு நல்லது செய்து நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ‘ரத்னம்’ பட புரொமோஷன் விழாவில் நடிகர் விஷால் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வருவது உறுதி, திரும்பத் திரும்ப நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, மக்களுக்கு நல்லது செய்ய செய்ய கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களம் இறங்குவேன்.

மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமாம், ஆனால் எம்பி எம்எல்ஏவுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடுவார்களாம், மக்கள் வரி செலுத்துகிறார்கள், அந்த வரிப்பணத்தில் நீங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வீர்கள், மக்கள் மட்டும் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா? இது என்ன கொடுமை? இங்கே நிறைய பிரச்சனைகள் உண்டு மாற்றம் நிச்சயம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் 2026ல் அரசியலுக்கு வருகிறேன் என்று விஷால் கூறினார்.

தேர்தல் நாளில் ஓட்டு போட சைக்கிளில் சென்றது குறித்த கேள்விக்கு ’என்னிடம் வண்டி இல்லை, அப்பா அம்மாவிடம் தான் வண்டி உள்ளது, என்னுடைய வண்டியை நான் விற்றுவிட்டேன், இன்றைக்கு இருக்கும் சாலை கண்டிஷனை பார்த்தால் பராமரிப்புக்கு செலவே அதிகமாகிறது, அந்த அளவுக்கு என்னிடம் காசு இல்லை, அதனால் தான் சைக்கிள் வாங்கி, டிராபிக் இல்லாமல் சென்று விடலாம் என்பதற்காக சென்றேன், இது விஜய்யின் இன்ஸ்பிரஷன் என்று சொல்ல முடியாது என்று கூறினார்.

More News

சித்திரை திருவிழா 2024: தமிழகம் முழுக்க கோலாகல கொண்டாட்டங்கள்!

வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் சித்திரை மாதம், தமிழகத்தில் கோலாகலமான திருவிழாக்களுக்கு பெயர் பெற்றது. 2024 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா எந்தெந்த ஊர்களில் எந்தெ

10 வருஷத்துக்கு முன் பார்த்த காஜல் அகர்வால்.. நம்ப முடியாமல் ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை காஜல் அகர்வால் 10 வருடங்களுக்கு முன் முன்னணி நடிகையாக இருந்தபோது எப்படி இருந்தாரோ அதேபோல் தற்போது மாறி இருக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

'கில்லி' படத்தை பார்க்க வந்தவர்கள் அளவுக்கு கூட ஓட்டு போட வரவில்லை: இயக்குனர் ஹரி வருத்தம்..!

இயக்குனர் ஹரி சமீபத்தில் நெல்லையில் 'ரத்னம்' படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட போது 'கில்லி' போன்ற திரைப்படங்களுக்கு வந்த ரசிகர்கள் கூட்டத்தின் அளவுக்கு கூட ஓட்டு போட பொதுமக்கள்

கமல், ரஜினி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கமல்ஹாசன் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் துரை காலமானார். அவருக்கு வயது 84.

என் புருஷனை எனக்கு தெரியும், பொண்டாட்டி யாருன்னு விஜய்க்கு தெரியும்: ஒரு குழப்பமும் இலலை: நடிகை சங்கீதா..!

விஜய்யின் மனைவி பெயரும் சங்கீதா, உங்கள் பெயரும் சங்கீதா என்பதால் அந்த சமயத்தில் சில குழப்பமான செய்திகள் வந்ததே என்ற கேள்விக்கு நடிகை சங்கீதா பதில் அளித்துள்ள வீடியோ