நானி-ஸ்ரீரெட்டி சர்ச்சை குறித்து விஷாலின் அதிரடி கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாகவே பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, டோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் அவர் குற்றஞ்சாட்டிய நபர் நடிகர் நானி. நானி குறித்து ஸ்ரீரெட்டி அநாகரீகமான முறையில் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நானி, இதுகுறித்து ஸ்ரீரெட்டி மீது வழக்கும் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், 'நானி எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். எனக்கு மட்டுமல்ல, அவருடன் நெருங்கிய பழகிய அனைவருக்கும் அவர் பெண்களிடம் எப்படி பழகுபவர் என்பது நன்றாக தெரியும். அவர் மீது குற்றஞ்சாட்டும் ஸ்ரீரெட்டி அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்.
தற்போதைய சட்டங்கள் யார் மீது வேண்டுமானாலும் ஆதாரம் இல்லாமல் பாலியல் குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்க கூடாது' என்று விஷால் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com