போன்ல டைம் டிராவலா? புதுசா இருக்கே.. 'மார்க் ஆண்டனி' டீசர்..!

  • IndiaGlitz, [Thursday,April 27 2023]

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதும் இன்று காலை தளபதி விஜய்க்கு இந்த படத்தின் டீசரை காண்பித்து படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் ஏற்கனவே ஒரு சில டைம் டிராவல் திரைப்படங்கள் வந்திருந்தாலும் இந்த டைம் டிராவல் படம் வித்தியாசமான திரைப்படம் என்று டீசரில் இருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக ஃபோனில் இருந்து டைம் ட்ராவல் என்பது இதுவரை யாரும் சிந்திக்காத கான்செப்ட் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைம் டிராவல் என்றாலே படத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு பல்வேறு கெட்டப்புகள் இருக்கும் வகையில் இந்த படத்திலும் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யாவுக்கு பல கெட்டப்புகள் உள்ளது என்பதும் குறிப்பாக விஷாலை விஷாலே எதிர்கொள்வது போன்ற ஒரு காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

More News

'லால் சலாம்' படத்தின் 50 நிமிட காட்சிகளை பார்த்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதனை அடுத்து படக்குழுவினர்களுக்கு அவர்

3 மணி நேர 'விடுதலை' படத்தை பார்க்க வேண்டுமா? இதோ ஒரு சூப்பர் அறிவிப்பு..

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை

உன் இறப்பால் நாங்கள் மனமுடைந்து போய் உள்ளோம்: குஷ்புவின் இரங்கல் பதிவு..!

நடிகை குஷ்பு வீட்டில் செல்லமாக வளர்ந்த நாய் குட்டி இறந்து விட்டதை அடுத்து உன் இறப்பால் நாங்கள் மனம் உடைந்து போய் உள்ளோம் என்று தனது சமூக வலைதளத்தில் இரங்கல் பதிவு செய்துள்ளார்.

எச்சரிக்கையாக இருங்க.. இது மிகப்பெரிய மோசடி.. ரசிகர்களை அலர்ட் செய்த கவர்ச்சி நடிகை..!

பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் எனது பெயரில் பண மோசடி நடப்பதாகவும் எனவே தனது ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அலர்ட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

குக் வித் கோமாளியில் 2 புதிய போட்டியாளர்கள்.. ஒருவர் பிரபல நடிகரின் பேரன், இன்னொருவர் கலை இயக்குனர்..!

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் கடந்த சீசன்கள் போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில்