விஷால்-சிம்பு திடீர் சந்திப்பு! முக்கிய ஆலோசனை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின்போது எதிரும் புதிருமாக இருந்தவர்கள் விஷால் மற்றும் சிம்பு. மேலும் சமீபத்தில் சிம்புவுக்கு ரெட் கார்ட் போட விஷால் முயற்சித்ததாகவும் வதந்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் முன்னணி நடிகர்களுடன் நடிகர் சங்கம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் நாசர், விஷால், கார்த்தி, சிம்பு, அரவிந்தசாமி, சுஹாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் படத்தயாரிப்பில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைப்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தின் ஸ்டில்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதில் சிம்புவின் தோள்மீது விஷால் கைபோட்டு, கார்த்தியுடன் ஆலோசனை செய்வது போன்ற ஒரு ஸ்டில் வெளிவந்துள்ளது. எதிரும் புதிருமாக இருந்த விஷால், சிம்பு தங்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகளை மறந்து திரையுலகின் நன்மைக்காக ஒற்றுமையாகியுள்ளது, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையை நோக்கி செல்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக காணப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com