வேட்புமனு நிராகரிப்பு: ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் செய்தி அனுப்பிய விஷால்

  • IndiaGlitz, [Wednesday,December 06 2017]

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனு நேற்று பரிசீலிக்கப்பட்டபோது முதலில் நிராகரிக்கப்படுவதாகவும், பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாகவும் வெளிவந்த செய்திகள் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் விஷால் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் விஷால் தனது சமூகவலைத்தள பக்கத்தில் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு வேண்டுகோளை வைத்துள்ளார். நான் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விஷயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.  என்னுடைய வேட்புமனு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது. இதனால் நான் முற்றிலும் அதிருப்தி அடைந்துள்ளேன். இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். உங்கள் மூலம் எனக்கு நல்ல நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

விஷாலின் இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்