25 வருட கனவு இன்று நனவாகிறது.. இன்று முதல் பணியை தொடங்குகிறேன்: விஷால் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
25 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இன்று நினைவாகிறது என்று நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ’செல்லமே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் விஷால் அதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதில் பல வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திரையில் நடிக்க வருவதற்கு முன் அவருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. தற்போது அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் 25 வருடங்களுக்கு முன் இயக்குனர் ஆக வேண்டும் என்ற நான் கண்ட கனவு தற்போது நனவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
முதன் முதலில் என் தந்தை ஜிகே ரெட்டியிடம் நான் இயக்குனராக வேண்டும் என்று கூறியவுடன் அவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். அதன் பின் அர்ஜுன் அவர்கள் ’இப்போதைக்கு விஷால் நடிக்கட்டும், இயக்குனராக எப்போது வேண்டுமானாலும் ஆகி கொள்ளலாம்’ என்று தெரிவித்ததை அடுத்த நான் நடிகர் ஆனேன். உங்கள் அன்பு ஆதரவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நடிகராக இருக்கும் நிலையில் தற்போது தான் ’துப்பறிவாளன் 2’ படத்தின் மூலம் நான் இயக்குனர் ஆகிறேன்.
முதன் முதலில் என்னுடைய இயக்குனர் பணியை நான் தொடங்க இருக்கிறேன், எனது 25 ஆண்டுகால கனவு நனவாகி உள்ளது. ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்புக்காக நான் தற்போது லண்டன் செல்ல உள்ளேன், இன்று நாங்கள் லண்டன் சென்று லொகேஷன் பார்க்கும் வேலையை முதல் கட்டமாக தொடங்கி அதன் பின்னர் மே மாதம் படப்பிடிப்பு நடந்த உள்ளோம்
ஒரு இயக்குனராக எனது கனவை முன்னெடுத்துச் செல்ல உதவிய மிஷ்கின் அவர்களுக்கு எனது நன்றி. ஒரு இயக்குனராக நான் உங்கள் முன் பேசிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் ஒரு லட்சியம் ஒரு கனவு என்பது நாம் கண்டிப்பாக வைத்திருப்போம். அந்த கனவை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வந்தால் நிச்சயம் அந்த கனவு ஒருநாள் நனவாகும்’ என்று விஷால் தெரிவித்துள்ளார்.
And my journey begins finally after 25 years. My dream, my aspiration, my first thought of wat I wanna be in life has come true. Yes, I take charge of a new responsibility, the most challenging in my career,that of a debutante director. Here we go finally. Off to London,… pic.twitter.com/aiLVQZ3Bbx
— Vishal (@VishalKOfficial) March 16, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments