விஜய் அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டிற்கு செல்வேன், ஏனெனில்... விஷால் பேட்டி..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டிற்கு பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஷால் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, விஜய் அழைப்பு விடுக்காவிட்டாலும், நான் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு செல்வேன் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷால் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஆசிட் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு, அவர் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு அழைப்பு வந்திருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ’இதுவரை அழைப்பு வரவில்லை; ஆனால் ஒரு வாக்காளராக, தமிழக வெற்றி கழக மாநாட்டுக்கு செல்வேன். அழைப்பு விடுக்காமலேயே சென்று, விஜய் என்ன பேசுகிறார் என்பதை கேட்பேன்.

இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகளை விட, விஜய் என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதை அறிய, தமிழக வெற்றி கழக மாநாட்டில் மக்களோடு மக்களாக சென்று பார்ப்பேன். மாநாட்டிற்கு அழைப்பு தேவையில்லை; மாநாட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில் நின்று அவர் என்ன பேசுகிறார் என்பதை நான் பார்ப்பேன். ஒரு புதிய அரசியல்வாதி வருகிறார் என்றால், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர் பேசுவதை கேட்க வேண்டும்; அதற்காக நான் மாநாட்டுக்கு செல்வேன் என்று கூறினார்.

இதனை அடுத்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா என்று கேட்ட கேள்விக்கு, ’விஜய் கட்சியில் இணைவேனா என்பதற்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. அவர் முதலில் மாநாடு நடத்தட்டும்; இப்போதுதான் முதலில் அடியை எடுத்து வைக்கிறார். அதன்பின், அவர் என்ன செய்யப் போகிறார், அவரது செயல்பாடுகள் என்ன என்பதற்கேற்ப தான், அவருடைய கட்சியில் இணைவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறினார்.

More News

இந்திரஜா ரோபோ சங்கரின் 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா.. நெகிழ்ச்சி பதிவு.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார் என்ற தகவல் வெளியானது.

பிக்பாஸ் அக்ரிமெண்ட் இத்தனை பக்கங்களா? வாசிக்காமல் வந்துவிட்டார்களா? வைரல் வீடியோ..!

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிக் பாஸ் குழுவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதும், அந்த ஒப்பந்தத்தை மீறுபவர்களுக்கு சம்பளம் கிடைக்காது

இந்த வார நாமினேஷன்.. சிக்கிய 4 பெண் போட்டியாளர்கள்.. யார் வெளியேற வாய்ப்பு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 15வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் அன்றைய எபிசோடின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்

மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாரா ரஜினிகாந்த்? முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் வீடு திரும்பினார் என்பதும்,

இயக்குனராகிறார் ஜெயம் ரவி.. முதல் பட ஹீரோ ஒரு காமெடி நடிகரா?

நடிகர் ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா ஏற்கனவே பிரபல இயக்குனராக இருக்கும் நிலையில், ஜெயம் ரவியும் இயக்குனராக இருப்பதாகவும்,