நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை.. த்ரிஷாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் குறித்து விஷால்..
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜுவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விஷாலும் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து ஆவேசமாக ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த முட்டாள் நம் திரையுலகை சேர்ந்த ஒருவரை மிகவும் கேவலமாக பேசி உள்ளதாக கேள்விப்பட்டேன். உங்கள் பெயரை அல்லது நீங்கள் குறி வைத்த நபரின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதை செய்தீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும், அதனால் நான் நிச்சயம் பெயரை கூற மாட்டேன்.
நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் அல்ல, திரையுலகில் சக கலைஞர்களாகவும் வாழ்ந்து வருகிறோம். நீங்கள் செய்த காரியத்திற்கு உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களை சரியானபடி கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன். பூமியில் இருக்கும் இத்தகைய ஒரு இழிவான பிறவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவு செய்வது எனக்கு உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.
நீங்கள் செய்தது முற்றிலும் தவறான ஒரு செயல், உண்மையில் நான் உங்களை கண்டிக்க விரும்பவில்லை, ஆனால் நீங்கள் இதற்காக தண்டனையை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கையை நான் வெளியிட விரும்பவில்லை.
இந்த பூமியில் ஒரு மனிதனாக நீங்கள் ஒருபோதும் இருக்க முடியாது என்று தெரிகிறது. நிச்சயமாக இது பிரபலங்களை பற்றி எதிர்மறை கருத்து தெரிவித்து அந்த விளம்பரத்தில் பணம் சம்பாதிக்கும் முயற்சிதான், இது போன்ற போக்கு அதிகரித்து விட்டது, குறைந்தபட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது தயவு செய்து கற்றுக் கொள்ளுங்கள்’ என்று நடிகர் விஷால் பதிவு செய்துள்ளார்.
I just heard that a stupid idiot from a political party spoke very ill and disgustingly about someone from our film fraternity. I will not mention your name nor the name of the person you targeted because I know you did it for publicity. I definitely will not mention names…
— Vishal (@VishalKOfficial) February 20, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments