'தளபதி 67' படத்தில் நடிக்கின்றேனா? விஷால் கூறிய மாஸ் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 67’ திரைப்படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகர் விஷால், இயக்குனர் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நடிகர் விஷால் ’தளபதி 67’ படத்தில் நடிப்பது குறித்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். ’தளபதி 67’ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தன்னை அணுகியது உண்மைதான் என்றும் ஆனால் தனக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் அதிகம் இருப்பதால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறி விட்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் தளபதி விஜய் அவர்கள் படத்தை இயக்கி அதே படத்தில் வில்லனாக நான் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் அந்தப் படம் விரைவில் உருவாகும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’தளபதி 67’ படத்தில் விஷால் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
.@Dir_Lokesh already met me but due to my previous commitments I couldn't take up #Thalapathy67. I am not part of it. But I like to direct Thalapathy after all my commitments. I will narrate a story after I finish Thupparivalan2~ @VishalKOfficial #Varisupic.twitter.com/O8EiFWjv7I
— Akshay (@Arp_2255) December 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments