நடிகை லட்சுமி மேனனுடன் திருமணமா? விஷால் அளித்த விளக்கம்..!

  • IndiaGlitz, [Friday,August 11 2023]

நடிகர் விஷால், நடிகை லட்சுமிமேனனை திருமணம் செய்ய போவதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

விஷால் மற்றும் லட்சுமிமேனன் ஆகிய இருவரும் இணைந்து ’பாண்டிய நாடு’ மற்றும் ’நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்த படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில் விஷால் மற்றும் லட்சுமி மேனன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திடீரென ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார் அந்த விளக்கத்தில் ’பொதுவாக என்னை பற்றி எந்த வதந்திகள் அல்லது போலி செய்திகள் வெளியானாலும் நான் அதற்கு பதில் அளிப்பதில்லை, அது பயனற்றது என்பது எனக்கு தெரியும்.

ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனனை நான் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்தி பரவி வருவதை அடுத்து இதை நான் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது.

எனது இந்த மறுப்புக்கு காரணம் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் கெடுக்கிறீர்கள் மற்றும் அவருடைய இமேஜையும் கெடுக்கிறீர்கள். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த விளக்கம்.

நான் யாரை திருமணம் செய்ய போகிறேன், திருமணம் எந்த ஆண்டு, தேதி, நேரம் என்பதை கண்டிப்பாக நான் நேரம் வரும்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்’ என்று விஷால் கூறியுள்ளார். இதனை அடுத்து விஷால் மற்றும் லட்சுமி மேனன் திருமணம் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.