'ரத்னம்' படத்திற்கு எதிரான கட்டப்பஞ்சாயத்து.. எனக்கே இப்படி என்றால்..? விஷால் ஆவேசம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘ரத்னம்’ படத்தை திரையிட விடாமல் சதி செய்வதற்காக கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுவதாகவும் எனக்கு இப்படிப்பட்ட நிலைமை என்றால் புதுமுக நடிகர்களின் நிலை என்ன ஆகும் என்றும் ஆவேசமாக விஷால் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்னம்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இந்த நிலையில் திடீரென விஷால் வெளியிட்டுள்ள ஆடியோவில் ‘ரத்னம்’ படத்தை திரையிட விடாமல் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘ரத்னம்’ படத்திற்காக விநியோகத் தொகை பாக்கியை தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதியில் உள்ள திரையரங்குகளில் படத்தை வெளியிட முடியும் என்று திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து தனக்கு ஒரு அறிக்கை வந்திருப்பதாக விஷால் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
அந்த தொகையை செலுத்துவதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ள விஷால் இது கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு சமமான வேலை என்றும் ஆவேசமாக கூறியுள்ளார். மேலும் தன்னைப் போன்ற நடிகர்களுக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடி இருக்கும் என்றும் வேதனையுடன் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
#Rathnam in theatres from tomorrow, book your tickets now 🔥
— IndiaGlitz - Tamil (@igtamil) April 25, 2024
Starring Puratchi Thalapathy @actorvishalofficial.
A @ThisisDSP musical.
A film by #Hari, in theatres from tomorrow.
@priyabhavanishankar @stonebenchers @invenio_origin @ZeeStudiosSouth @mynaasukumarm #TSJay… pic.twitter.com/H36ApmSUbB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments