மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும்: விஷால் ஆவேசம்

  • IndiaGlitz, [Friday,May 28 2021]

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தூக்கிலிட வேண்டும் என விஷால் ஆவேசமாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தங்களது கருத்தை ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷால் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னை கூனிக்குறுக செய்கிறது. அந்தப் பள்ளி கண்டிப்பாக மூடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோர்களிடம் இன்னும் ஒருவர் கூட மன்னிப்பு கேட்கவில்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு தீவிர நடவடிக்க எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னுடைய நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இதனை ஒரு சாதிப் பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபரை தூக்கில் தொங்கவிட வேண்டும். அப்படி செய்தால் தான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புரியும். குறைந்தபட்சம் இப்போதாவது மாணவர்களிடமும், பெற்றோரிடமும் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்’ என்று விஷால் தெரிவித்துள்ளார்.