நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும்: விஷால் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் விரைவில் மாற்றப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சங்கத்தின் தேர்தலில் பதிவான வாக்குகள் சமீபத்தில் எண்ணப்பட்டு பாண்டவர் அணி வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி மற்றும் துணை தலைவர்களாக கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் நேற்று பதவி ஏற்றனர். முன்னதாக நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் முதல் பணியாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை முடிக்கும் பணி தொடங்க இருப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இது குறித்து பேட்டியளித்த விஷால், ‘நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முழுவீச்சில் தொடங்கப்படும் என்றும் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி முடித்தவுடன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
எனவே ஏற்கனவே தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என முன்னணி நடிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் விரைவில் இந்த பெயர் மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments