கஸ்தூரி மகாலிங்கத்தை டாக்டர் ஆக்குவது நமது கடமை: விஷால்

  • IndiaGlitz, [Monday,May 07 2018]

இந்தியா முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்த நிலையில் முக்கிய குழப்பமாக தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் வெளிமாநிலங்களில் இந்த தேர்வை பெரும் சிரமங்களுக்கு இடையே எழுதினர். 

இந்த நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்றார். அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கிருஷ்ணசாமி கேரளாவில் மரணம் அடைந்தார். கிருஷ்ணசாமியின் மறைவிற்கு மன அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது.

கிருஷ்ணசாமியின் மறைவிற்கு தமிழக முதல்வர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து பல்வேறு உதவிகளும் செய்துள்ள நிலையில் நடிகர் விஷாலும் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை டாக்டர் ஆக்குவது நமது கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 

இன்று நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது வாழ்த்துகள். கடும் மன உளைச்சலுக்கும் அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத்துவக் கனவுக்காக என் தம்பி, தங்கைகள் இந்தத் தேர்வை எழுதியிருக்கிறார்கள். 

நீட் தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறி கொடுத்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை ஒரு மருத்துவராக்கி கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் கடமை. கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அதற்கான உதவிகளை செய்யத் தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்’ என்று விஷால் கூறியுள்ளார்.

More News

11ஆம் வகுப்பு பாடத்தில் சிம்பொனி தமிழரும், ஆஸ்கார் தமிழரும்

வரும் கல்வியாண்டு முதல் தமிழக பள்ளிகளில் உள்ள 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது என்பது தெரிந்ததே.

தந்தை இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதி வரும் தமிழ் மாணவர்

நீட் தேர்வை கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் எழுதி வரும் தமிழ் மாணவர் ஒருவர் தனது தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வை எழுதி வருகிறார்

பட வாய்ப்புக்காக படுக்கை குறித்து கருத்து கூறிய சமந்தா

திரையுலகில் பட வாய்ப்புகாக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இருப்பதாக அவ்வப்போது எழுந்து வரும் புகார்களின் மூலம் தெரியவருகிறது.

3 பக்க தமிழ் வசனத்தை ஒரே டேக்கில் ஓகே செய்த விஜய்

சமீபத்தில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, தமிழில் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'நோட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ஹன்சிகா

இதுவரை ஜாலியான, பொழுதுபோக்கு படங்களில் நடித்து வந்த நடிகை ஹன்சிகா, முதன்முறையாக சவாலான கேரக்டரை ஏற்று நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாஅர்.