பா ரஞ்சித்தை அடுத்து திமுகவை எதிர்த்து களமிறங்குகிறாரா விஷால்.. அதிரடியாக கேட்ட ஒரு கேள்வி..!

  • IndiaGlitz, [Monday,July 22 2024]

சமீபத்தில் திமுகவை இயக்குனர் பா ரஞ்சித் கடுமையாக விமர்சனம் செய்து பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திமுகவுக்கு எதிராக நடிகர் விஷாலும் பேட்டி அளித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷால் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜிஎஸ்டி வரி குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது ‘தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இரண்டு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, இந்த அரசாக இருந்தாலும் சரி, அதையேதான் தொடர்ந்து செய்கிறது.

சினிமா மிகவும் கஷ்டப்படுகிறது, சினிமா துறைக்கு இந்த ஆண்டு மிகவும் கடினமான ஆண்டு. சிறிய படத்தை யாரும் வாங்க முன் வருவதில்லை. அடுத்து வரும் மாதங்களில் பல புதிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்களும் தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ் என்று பெரிய நடிகர்களே எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி இருந்தால் சின்ன படங்கள் எப்படி ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எழுப்பினார்.

மேலும் சினிமா துறையில் அரசு தலையிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஷால், ‘அரசு ஏன் சினிமாவுக்குள் வரவேண்டும், கடந்த அரசு சினிமாவுக்குள் வரவே இல்லை, அரசு சினிமாவுக்கு வர வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் பொதுப்பணி துறையை கவனித்துக் கொண்டால் மட்டும் போதும். அரசுக்கு எதுக்கு சினிமாத்துறை? சினிமாத்துறை சினிமா துறையாகவே இருந்து விட்டு போகட்டும்’ என்று மறைமுகமாக திமுகவை எதிர்த்து பேசி உள்ளார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களத்தில் இறங்குவீர்களா? என்று கேட்ட கேள்விக்கு ’நான் அரசியலில் இறங்க வேண்டுமா? இல்லையா? என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். மக்கள் முடிவு செய்து இறங்குங்கள் என்று சொன்னால் வேறு வழி இல்லை, இறங்கி தான் ஆக வேண்டும்.

மக்கள் அனைத்து வசதிகளும் பெற்று நன்றாக இருந்தால் நடிகர்கள் சினிமாவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை, நாங்கள் ஏன் அரசியல்வாதியாக நினைக்கிறோம், மக்கள் கஷ்டப்படுவதால் தான் அவர்கள் குறையை தீர்க்க அரசியலுக்கு வருகிறோம்’ என்றும் தெரிவித்தார்.

More News

வயக்காட்டு பம்புசெட்டில் ஜாலி குளியல் போட்ட அஞ்சனா ரங்கன்.. வைரல் வீடியோ..!

வயல் வெளியில் உள்ள பம்பு செட்டில் குளிப்பது என்பது ஒரு ஜாலியான அனுபவம் என்ற நிலையில் பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வயல்வெளியில் பம்பு செட்டில் குளித்த வீடியோவை

டாக்டர் படிப்பை முடித்து மருத்துவராகிவிட்ட தமிழ் நடிகை.. அமெரிக்காவில் செட்டில்..!

தமிழ் திரை உலகில் நடித்துக் கொண்டிருந்த நடிகை டாக்டர் ஆக வேண்டும் என்று கனவுடன் இருந்த நிலையில் அவர் தற்போது டாக்டருக்கு படித்து முடித்து அமெரிக்காவில் மருத்துவராக பணி செய்து வருவதாக தகவல்

இயக்குனர்கள், நடிகர்களை அடுத்து முதல்வர் மீது அவதூறு பேச்சு.. நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு..!

தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய நிலையில் தற்போது முதலமைச்சர்

'ரஞ்சிதமே' சீரியல் நடிகர் புற்று நோயால் பாதிப்பு.. பிரார்த்தனை செய்யுமாறு மகள் வேண்டுகோள்..!

பிரபல சீரியல் நடிகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவரது மகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

ரொம்ப நாளா அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட்.. சூப்பர் தகவலை சொன்ன லைகா..!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.