சென்சார் சான்றிதழ் வாங்க லட்சக்கணக்கில் லஞ்சம்.. விஷால் கூறிய அதிர்ச்சி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தை சென்சார் செய்வதற்காக லஞ்சம் கொடுத்துள்ளதாக விஷால் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்தி பதிப்பை சென்சார் செய்வதற்காக சென்சார் அதிகாரிகளுக்கு 6.5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகவும் 3 லட்ச ரூபாய் படத்தை திரையிடுவதற்கு, 3 லட்ச ரூபாய் சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு கொடுக்கப்பட்டதாகவும் இதுவரை தனது திரையுலக வாழ்வில் இப்படி ஒரு மோசமான அனுபவத்தை கண்டதில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த தகவலை மகாராஷ்டிரா மாநில முதல்வர் அவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்றும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எதிர்காலத்தில் ஊழல் மிக மலிந்து விடும் என்றும் தான் கேட்டுக் கொள்வதாகவும் உண்மை எப்போதும் வெல்லும் என்று நம்புவதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் ரூ.3 லட்சம் கொடுக்கப்பட்ட நபரின் பெயர் மற்றும் அவரது வங்கி கணக்கு ரூ.3.5 லட்சம் கொடுக்கப்பட்ட நபர் மற்றும் வங்கி கணக்கையும் அவர் பதிவு செய்துள்ளார். விஷாலின் இந்த பதிவுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#Corruption being shown on silver screen is fine. But not in real life. Cant digest. Especially in govt offices. And even worse happening in #CBFC Mumbai office. Had to pay 6.5 lacs for my film #MarkAntonyHindi version. 2 transactions. 3 Lakhs for screening and 3.5 Lakhs for… pic.twitter.com/3pc2RzKF6l
— Vishal (@VishalKOfficial) September 28, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com