அமலாபால் தைரியத்திற்கு பிரபல நடிகரின் சல்யூட்

  • IndiaGlitz, [Saturday,February 03 2018]

சமீபத்தில் நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு பிரபலமாக இருந்தாலும் தைரியமாக காவல்துறையில் புகார் அளித்த அமலாபாலின் தைரியம் குறித்து பலர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளர் விஷால், அமலாபாலின் தைரியத்தை பாராட்டி டுவீட் பதிவு செய்துள்ளார். 'சமீபத்தில் நடந்த சம்பவத்தில் உங்களுடைய தைரியமான முடிவுக்கு பாராட்டுக்கள். உங்களின் தைரியத்திற்கு ஒரு சல்யூட். இவரைப் போன்ற மனிதர்களுக்கு உங்களுடைய தைரியம் ஒரு பாடமாக இருக்கும்.

மேலும் அமலாபாலின் புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்களுக்கும் எனது நன்றிகள்' என்று விஷால் அந்த டுவீட்டில் கூறியுள்ளார்.

More News

இந்த கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய போறேன்: த்ரிஷா

தமிழ் சினிமாவில் இதுவரை ஜெய்சங்கர் காலத்தில் இருந்து எத்தனையோ துப்பறிவாளர் படங்கள் வந்துள்ளது. ஆனால் முதல்முறையாக ஒரு பெண் துப்பறிவாளர் படம் விரைவில் தயாராகவுள்ளது.

நான் இதை எதிர்பார்க்கவே இல்லை: ரஜினி குறித்து அனுஷ்கா

நடிகை அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பாகமதி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்று வசூலை குவித்து வருகிறது.

இசைஞானியை இளம் அரசியல் தலைவர் சந்தித்தது ஏன் தெரியுமா?

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சமீபத்தில் பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து இந்த விருது அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சீனாவில் இரண்டே வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்த இந்திய திரைப்படம்

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்தது.

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.