அமைதி காத்தது போதும், இப்போதாவது பேசுங்கள்: பிரதமருக்கு விஷால் கோரிக்கை
- IndiaGlitz, [Tuesday,May 22 2018]
இன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தால் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்திற்கு நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படட்டது கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுநலனை கருத்தில் கொண்டே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் சுயநலம் இல்லை. 50,000 பேர் கூடி போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அந்த ஊரின் நலனை கருத்தில் கொண்டே போராடுகிறார்கள்.
அன்பிற்குரிய பிரதமரே, அமைதி காத்தது போதும், இப்போதாவது பேசுங்கள். போராட்டம் என்பதே ஜனநாயகம் தான் என்னும் போது, மக்கள் ஏன் அதை செய்யக் கூடாது.
இந்த அரசு மக்களுக்காகத் தான் செயல்படுகிறதா. 2019-ஆம் ஆண்டே விழித்துக் கொள். என்று கூறியிருக்கிறார்