பாஜக தோல்விக்கான காரணத்தை கூறிய விஷால்

  • IndiaGlitz, [Wednesday,December 12 2018]

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்த நிலையில் இவற்றில் ஒரு மாநிலத்தில் கூட பாஜக ஆட்சியை பிடிக்கும் வகையில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக பாஜகவின் கோட்டை என்று கருதப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களிலேயே அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் பின்னடைவு குறித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், குஷ்பு, உள்பட பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷால் பாஜகவின் இந்த தோல்விக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்ததுதான் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம் என்றும், மக்களின் மனதில் இருந்த முடிவுகள்தான் தற்போது தேர்தல் முடிவாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கமல், ரஜினி போலவே கடந்த சில நாட்களாக விஷால் அரசியல் கருத்துக்களை அதிகம் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெற்றிகள் தொடரட்டும்: ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 69வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்களும் அரசியல தலைவர்களும் கோடிக்கணக்கான ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல் திருமண நாளில் அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட வீடியோ

பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, கடந்த ஆண்டு இதே நாளில் அதாவது டிசம்பர் 11ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியை திருமணம் செய்தார்

பாஜக பின்னடைவு குறித்து கமல்ஹாசன் கருத்து

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்ட ரஜினிகாந்த், 'பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது' என்று கூறியதை சற்றுமுன் பார்த்தோம்

5 மாநில தேர்தல்: பாஜக பின்னடைவு குறித்து ரஜினி கருத்து

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டது.

ரஜினி பிறந்த நாளில் படக்குழுவினர் தரும் விருந்து இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக அவரது ரசிகர்களுக்கு வெளிவரவுள்ள நிலையில் நாளை வழக்கம்போல் ரஜினி பிறந்த நாளை கொண்டாடவும் ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர்.