பாஜக தோல்விக்கான காரணத்தை கூறிய விஷால்

  • IndiaGlitz, [Wednesday,December 12 2018]

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்த நிலையில் இவற்றில் ஒரு மாநிலத்தில் கூட பாஜக ஆட்சியை பிடிக்கும் வகையில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக பாஜகவின் கோட்டை என்று கருதப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களிலேயே அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் பின்னடைவு குறித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், குஷ்பு, உள்பட பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷால் பாஜகவின் இந்த தோல்விக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்ததுதான் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம் என்றும், மக்களின் மனதில் இருந்த முடிவுகள்தான் தற்போது தேர்தல் முடிவாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கமல், ரஜினி போலவே கடந்த சில நாட்களாக விஷால் அரசியல் கருத்துக்களை அதிகம் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.