என் வாழ்க்கையே ஒரு வட்டம் தான். விஷால்

  • IndiaGlitz, [Sunday,November 12 2017]

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படமான 'இரும்புத்திரை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படம் குறித்து விஷால் கூறியதாவது: என்னுடைய திரையுலக வாழ்க்கையே ஒரு வட்டமாகத் தான் தெரிகிறது. நான் யாரிடம் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்து என் வாழ்க்கையின் முதல் ஊதியத்தை பெற்றேனோ அவரே எனக்கு வில்லனாக இரும்பு திரை படத்தில் நடிக்கிறார். ஆனால் இப்போதும் அவர் தான் எனக்கு குரு. அவர் தான் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். இது ஒரு உயிரோட்டமான பயணம். நாங்கள் படத்தில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வரும். முக்கியமாக க்ளைமாக்ஸில் நாங்கள் இருவரும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி. எங்கள் இணையைக் காண காத்திருங்கள்' என்று கூறியுள்ளார்

வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா, மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் செய்கிறார்கள். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

ரஜினியுடன் இணைந்து அரசியல் பயணம் சாத்தியமா? கமல் பதில்

கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் உள்ளார். வரும் ஜனவரி முதல் ஒவ்வொரு செய்தியாக வரும் என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளதால் அவருடைய கட்சி அடுத்த ஆண்டு உதயமாகும்

சிங்கம் குகையில் இல்லாத போது அரசியல் செய்கிறார் கமல்: சரத்குமார்

உலக நாயகன் கமல்ஹாசன் இனிமேலும் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வியை எழுப்ப அவசியமில்லாத வகையில் விறுவிறுப்பாக அரசியல் பணியை படிப்படியாக செய்து வருகிறார்.

அந்தப் பாடலை நான் எழுதவில்லை. இசையமைக்கவில்லை. சிம்பு

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சிம்பு பாடிய பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வைரலானது. ’தட்ரோம் தூக்குறோம்’ என்று தொடங்கும்

இன்றிரவு முதல் சென்னையில் மழை வெளுத்து வாங்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் மழை குறித்து பதிவு செய்திருக்கும் முக்கிய தகவல் இதுதான்:

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து தினகரன் முக்கிய அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ உரிய நேரத்தில் தேவைப்பட்டால் வெளியிடப்படும் என சசிகலாவின் உறவினர்கள் கூறி வந்தனர்.