அஜித், விஜய், வரலட்சுமி குறித்து விஷால் அளித்த பேட்டி
- IndiaGlitz, [Wednesday,May 16 2018]
நடிகர் விஷால் சமீபத்தில் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி இந்திய திரையுலகமே பாராட்டும் அளவிற்கு திரைத்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் அவர் ஆற்றிய பணி மகத்தானது என்று திரையுலகினர் கூறி வருகின்றனர். அதேபோல் அவருடைய நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'இரும்புத்திரை' திரைப்படமும் அவரது போராட்டம் போலவே வெற்றி பெற்றுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித், விஜய் மற்றும் வரலட்சுமி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அவர்களை ஆரம்ப கட்டத்திலிருந்து பார்த்து இருக்கிறேன் அவரை பற்றி வந்த தரக்குறைவான அனைத்து விமர்சனங்களையும் அவர் தாங்கி முன்னுக்கு வந்துள்ளார் அதுவே எனக்கு ஒரு உத்வேகமாக இருந்தது. அதை பின்பற்றி தான் என் மீதான் விமர்சனங்களை நான் கண்டுகொள்ளாமல் என் கடமையை செய்தேன்.
அஜித் அவர்கள் ஒரு முறை கலைஞர் ஐயா முன்னாடி கூறினார். ஏன் எங்களை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என மிரட்டுகிறீர்கள் என்று. அது தனிபட்ட விஷியம் என்றார், அது போல தான் பல போராட்டங்களுக்கு நாங்கள் வர சொல்லி யாரையும் கட்டாய படுத்தவில்லை, அது அவரவர் விருப்பம். அஜித் சங்க கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அது அவர் தனிப்பட்ட விஷயம். அவர் அவருக்கென ஒரு தனி சட்டம் வைத்து வாழ்கிறார். அதை நான் அழித்து விட்டு வாங்க என்று நான் கூற கூடாது. எனக்கே இசை வெளியீட்டு விழாவுக்கு செல்ல பிடிக்காது. அவர் நடிகர் சங்கத்துக்கு எதிராக இல்லை, வந்தால் யானை பலம் தான்.
வரலெட்சுமி என் நெருங்கிய தோழி. நான் அழுதது, சிரித்தது எல்லாம் பார்த்த தோழி. என் எட்டு வருட சிறந்த நினைவில் அவர் இருக்கிறார்.
இவ்வாறு நடிகர் விஷால் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.