விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காதது: விஷால்

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

அஜித், விஜய் ஆகிய இருவருமே  தமிழ் சினிமாவின் இரு துருவங்கள். இருவரின் படங்கள் வெளியாகும்போது அவர்களது ரசிகர்கள் ஒரு திருவிழா போன்று கொண்டாடுவர். அதேபோல் ஒப்பனிங் வசூலையும் ஒருவர் படத்தை இன்னொருவர் படம் முந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விஷால், விஜய்யிடம் பிடித்த விஷயம் குறித்தும், அஜித்திடம் பிடிக்காத விஷயம் குறித்தும் மனம் திறந்து கூறியுள்ளார். 

விஜய்யின் தன்னம்பிக்கை, பொறுமை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், அவர் தனக்கு வந்த விமர்சனங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு அதையும் மீறி இந்த இடத்தில் நிற்கிறார் என்றும் கூறிய விஷால் விஜய்யிடம் தனக்கு பிடிக்காத விஷயம் ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்

மேலும் அஜித் குறித்து கூறியபோது, 'எளிதில் தொடர்பு கொள்ள முடியாத வகையில் உள்ளார். மற்றவர்கள் ரீச் பண்ண முடியாத இடத்தில் அவர் இருப்பது மட்டும்தான் எனக்கு பிடிக்காது. மற்றபடி அனைத்து விஷயங்களிலும் அஜித்தை எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.