என்னை பழிவாங்க இது சரியான நேரம் இல்லை. விஷால்

  • IndiaGlitz, [Tuesday,January 24 2017]

கடந்த சிலநாட்களாக நடிகர் விஷால் குறித்து சர்ச்சைக்குரிய வதந்திகள் பரவுவதும் அதற்கு அவர் விளக்கம் அளித்து கொண்டு வருவதுமாக உள்ள செய்திகளை பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட அவர் பீட்டா விஷயத்தில் பரவிய வதந்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதை சரி என்று பிரபல ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் சமூக வலைத்தள பக்கத்தில் விஷால் பதிவு செய்ததாக வதந்தி பரவி வருகிறது,
இந்த வதந்திக்கு விஷால் தற்போது வீடியோ ஒன்றின்மூலம் விளக்கம் அளித்துள்ளார். மாணவர்கள் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் என்னை பழிவாங்குவதற்காக யாரோ இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். என்னை பழிவாங்க தயவு செய்து இதுபோன்ற வழிகளை பயன்படுத்த வேண்டும். வேறொரு வழியில் பழிவாங்கி கொள்ளுங்கள். பொதுமக்களும், மாணவர்களும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று கேட்டுக் கொள்வதாக விஷால் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More News

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணையும் சத்யராஜ்-வடிவேலு கூட்டணி

இங்கிலீஷ்காரன், லூட்டி, பெரிய மனுஷன் உள்பட பல திரைப்படங்களில் சத்யராஜ்-வடிவேலு காமெடி கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகியது என்பது தெரிந்ததே. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த கூட்டணி மீண்டும் இணணகிறது...

சென்னை ஜல்லிக்கட்டை அடுத்து மும்பைக்கு செல்லும் சிம்பு

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது பெரும் பங்கை அளித்த நடிகர் சிம்பு, தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து மும்பைக்கு செல்லவுள்ளார். ஆம் அவர் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பாடல் படப்பிடிப்பிற்காக அவர் வெகுவிரைவில் படக்குழுவினர்களுடன் மும்பை செல்லவுள்ளதாக தகவல

'விஜய் 61' படத்தில் பிரபல காமெடி நடிகர்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. கலவையான விமர்சனம், ஜல்லிக்கட்டு போராட்ட பிரச்சனைகளையும் தாண்டி இந்த படம் திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது...

சூர்யாவின் 'சி 3' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' திரைப்படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வரும் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு அதற்கான முன்பதிவும் தொடங்கியது...

உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா? பீட்டா ராதாராஜனை வெளுத்து வாங்கிய டிடி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என லட்சக்கணக்கானோர் தியாக உள்ளத்துடன் கடந்த ஒரு வாரமாக வெயில், மழை, குளிர் பாராமல் தன்னலம் கருதாமல் போராடினர்...