வெள்ள நிவாரண நிதியாக அஜித்-விஜய் கொடுத்தது எவ்வளவு? விஷால் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,December 28 2015]

சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் கனமழை பெய்து அதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு தங்கள் சொத்துக்களையும் உறவினர்களையும் இழந்த நிலையில் அவர்களுக்கு கைகொடுத்து உதவ பல தன்னார்வ அமைப்புகள் உதவி செய்தனர். இதில் கோலிவுட் திரையுலகினர்களின் பங்கும் பெருமளவில் இருந்தது. பல லட்சங்கள் முதல் சில ஆயிரம் வரை பெரிய, சிறிய நடிகர்கள் என பாகுபாடில்லாமல் நிதியுதவியும், பொருளுதவியும் செய்தனர்.

இந்நிலையில் தமிழகத்தின் இருபெரும் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் வெள்ள நிவாரண நிதியாக எவ்வளவு கொடுத்தார்கள் என்பது குறித்து மாறுபட்ட செய்திகள் இணையதளத்தில் வெளியாகியது. இதுகுறித்து சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய நடிகர் சங்க செயலாளர் விஷால், 'அஜித் மற்றும் விஜய் இருவருமே நடிகர் சங்கத்தின் மூலம் எந்தவித பணமும் தரவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் பல நடிகர்கள் வெள்ள நிவாரண உதவி செய்தனர்' என்று கூறினார்.

மேலும் நடிகர் சங்கத்திடம் வெள்ள நிவாரண நிதியாக அஜித் ரூ.60 லட்சம் கொடுத்ததாகவும் விஜய் ரூ.3 கோடி கொடுத்ததாகவும் வெளிவந்த தகவல்கள் முற்றிலும் வதந்தியே என்றும் அவர் கூறினார்.

More News

பிரபல தமிழ் நடிகைக்கு எலும்பு முறிவு

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி, தற்போது பாபிசிம்ஹாவுடன் 'கோ 2'...

கொரிய, சைனீஸ் மொழிகளில் ரீமேக் ஆகும் ராகவா லாரன்ஸ் படம்

தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய பல திரைப்படங்கள் இந்திய மொழிகளில் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக்...

புத்தாண்டு ரிலீஸ் பட்டியலில் இணையும் சந்தானம் படம்

தமிழ் திரையுலகம் 2015ஆம் ஆண்டில் பல வெற்றி, தோல்வி படங்களை கடந்துள்ள நிலையில் வரும் 2016...

ரஜினியின் சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் ஆர்யா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டாகிய 'பில்லா', 'மாப்பிள்ளை' உள்பட ஒருசில படங்கள் ரீமேக் ஆகி மீண்டும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது...

முழுநேர குடும்பத் தலைவியாக மாறுகிறார் அனுஷ்கா

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் குணசேகர் இயக்கிய 'ருத்ரம்மாதேவி' ஆகிய படங்களில் சரித்திரகால நாயகியாகவும்...