தமிழக முதல்வருக்கு விஷால் வாழ்த்து கோரிக்கை

  • IndiaGlitz, [Monday,May 23 2016]

தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்ற நிலையில் ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் சார்பில் அச்சங்கத்தின் செயலாலர் விஷால் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
பதவியேற்பு விழா முடிந்தபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால், 6வது முறையாக சாதனை வெற்றி பெற்றுள்ள முதல்வருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளும் இந்த நேரத்தில் முதல்வர் அவர்களுக்கு தான் ஒரு கோரிக்கை வைப்பதாகவும், நடிகர் சங்க கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவை முதல்வர் ஜெயலலிதா நடத்தி தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் நடிகர் சங்கத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுடன் இருக்கும் முதல்வர் கண்டிப்பாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் விஷால் கூறியுள்ளார்.