நடிகர் சங்க தேர்தல்: விஷால் விடுத்த முக்கிய வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நடிகர் சங்கம் தேர்தலை முன்னிட்டு வரும் 23ம் தேதி திரைத்துறைக்கு விடுமுறை அளிக்க நடிகர் சங்க செயலாளர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜா அண்ணாமலைபுரம், சத்யா ஸ்டுடியோ டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராக உள்ள அனைத்து திரைப்பட நடிகர்/நடிகையர்கள் நேரில் வந்து தங்கல் வாக்கினை பதிவு செய்ய உள்ளனர்.
மேலும் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள பலர் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளனர். எனவே அவர்களும் தங்கள் வக்கினை பதிவு செய்வதற்கு தேர்தல் தேதியன்று விடுமுறை அளித்து எங்களது சங்கத்தின் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com