19 பாடகர்கள் பாடிய சென்னை பாடல். விஷால் வெளியிட்டார்
Send us your feedback to audioarticles@vaarta.com
இம்மாத தொடக்கத்தில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சென்னையே தத்தளித்தது. இந்நிலையில் கோலிவுட் பிரமுகர்கள் நேரடியாக களத்தில் இறங்கி நிவாரண பணிகளுக்கு பெரும் உதவி செய்தனர். குறிப்பாக விஷால், கார்த்தி, சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, இளையராஜா, உள்பட பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த நிவாரண உதவிகள் மகத்தானது.
இந்நிலையில் வெள்ளத்தால் மூழ்கிய சென்னை மீண்டும் முன்புபோல மீண்டும் வரவேண்டும் என்ற நோக்கத்தில் 'சென்னையே மீண்டு வா' என்ற வீடியோ பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை பா.விஜய் எழுத சத்யன் இசையமைத்துள்ளார். இந்த பாடலை சீர்காழி சிவசிதம்பரம், உன்னிகிருஷ்ணன், மனோ, க்ரிஷ், அனிதா, சத்யன் மகாலிங்கம், பிரசன்னாராவ், கிருஷ்ணராஜ், திப்பு, ஹரினி, முகேஷ், ப்ரியா ஹேமேஷ், மிஷ்கின், அனந்து, திவாகர், டி.எல்.மஹாராஜன், சாம் பி.கீர்த்தன், பேபி சுதந்த்ரா உள்பட 19 பாடகர்கள் பாடியுள்ளனர். இந்த பாடலை பி.எல்தேனப்பன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்திற்கு முன்பு இருந்த சென்னையை மீண்டும் கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சென்னையை மீட்டெடுப்பது சென்னையில் உள்ள ஒவ்வொருவரின் கடமை என்றும் இந்த வீடியோவை வெளியிட்ட நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com