சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு விஷாலின் அதிரடி பதில்

  • IndiaGlitz, [Tuesday,November 15 2016]

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்டதாக வெளிவந்த தகவலை அடுத்து விஷால் சற்று முன் வடபழநியில் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தார்.
இதில் அவர் கூறியதாவது, தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியது குறித்த சரியான காரணம் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரபூர்வமான கடிதமும் எனக்கு வரவில்லை. பத்திரிகையின் வாயிலாகவே மட்டுமே இந்த விஷயத்தை தெரிந்து கொண்டேன்.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் முறையாக நடைபெற வேண்டும். அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். சிறிய தயாரிப்பாளர்கள் மீது அக்கறை கொண்டு கேள்வி கேட்பது தவறா? விஷால் என்ற தயாரிப்பாளருக்கு இந்த நிலைமை என்றால் சிறு தயாரிப்பாளர்கள் நிலைமையை எண்ணி பார்க்க வேண்டும்' என்று கூரினார்.
முன்னதாக கருணாஸ் தயாரிப்பாளர் சங்கம் குறித்து கருத்து கூறியபோது, 'தயாரிப்பாளர் சங்கம் போண்டா, பஜ்ஜி சாப்பிடுவதை தவிர வேறு எந்தவித உருப்படியான வேலையையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார். இதனை குறிப்பிட்ட விஷால், கருணாஸ் மீது தயாரிப்பாளர் சங்கம் முடிந்தால் கருணாஸ் மீது நடவடிக்கை எடுத்து பார்க்கட்டும். ஆனால் அச்சங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காது. ஏனெனில் அவர் ஆளும்கட்சி ஆதரவுள்ள ஒரு எம்.எல்.ஏ. அவ்ர் சொன்ன அதே கருத்தைத்தான் நான் சொன்னேன். என்மீது நடவடிக்கை எடுத்துள்ள தயாரிப்பாளர் சங்கம் முடிந்தால் கருணாஸ் மீது நடவடிக்கை எடுத்து பார்க்கட்டும்' என்று சவால் விடும் தொனியில் பேசியுள்ளார்/.
மேலும் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தாணு உள்பட அனைவர் மீதும் தான் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர்களுக்கும் தனக்கும் எந்தவித தனிப்பட்ட விரோதமும் கிடையாது என்றூம் கூறிய விஷால், சிறிய தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதே தன்னுடைய நிலை என்றும் கூறினார்.
சூர்யாவின் '24' திரைப்படம் பெங்களூர் பிவிஆர் திரையரங்கில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டு திருட்டு டிவிடி தயாரித்ததை ஆதாரத்துடன் நிரூபித்தபோதிலும் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி கேட்ட விஷால் நடிகர் சங்கத்தை இளையதலைமுறை நடிகர்கள் தலைமையில் ஆக்கபூர்வமாக இயங்கி வருவது போல், தயாரிப்பாளர் சங்கத்தையும் இளையதலைமுறை தயாரிப்பாளர்கள் கைப்பற்றி அனைவருக்கும் நல்லது செய்யும் நாள் வெகுதூரத்தில் இல்லை' என்று கூறியுள்ளார்.

More News

'கபாலி' கணக்கை காட்ட முடியுமா? ரஜினிக்கு அமீர் கேள்வி

பிரதமர் மோடியின் கருப்புப்பண நடவடிக்கைக்கு முதல் ஆளாக ஆதரவு குரல் கொடுத்த ரஜினி அவர்கள் 'கபாலி' கணக்கை காட்ட முடியுமா? என்று பிரபல இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்யின் 'பைரவா' படப்பிடிப்பு குறித்த முக்கிய செய்தி

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் அவர் நடித்து வந்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது.

தர்மதுரை படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் தமிழகத்தில் 75 நாட்களுக்கும்....

விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாகவே தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கு கருத்துவேறுபாடு...

பணத்தட்டுப்பாடு எதிரொலி: தள்ளி போகும் தமிழ் சினிமாக்களின் ரிலீஸ்

பாரத பிரதமர் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் கருப்பு பண முதலைகள் முதல் சாமானிய பொதுஜனம்...