close
Choose your channels

தயாரிப்பாளர் சங்கத்திடம் வருத்தம் தெரிவித்தார் விஷால். சஸ்பெண்ட் ரத்தாகுமா?

Wednesday, January 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்ததாக சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'விஷால் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினால், அவரது இடைநீக்கம் உத்தரவை மீண்டும் பரிசீலிக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுகுறித்து விஷால் தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் விஷால் இன்று வருத்தம் தெரிவித்த மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், 'சம்பந்தப்பட்ட பேட்டியில் தன்னுடைய கருத்து யாருக்காவது மன வருத்தத்தை ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும், யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது தனது நோக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
விஷாலின் இந்த வருத்த மனு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்றும் இன்று தயாரிப்பாளர் சங்க வழக்கறிஞர் கூறியதை தொடர்ந்து இந்த வழக்கு ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment