இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு: விஷாலின் அதிரடி அரசியல் அறிக்கை..!

  • IndiaGlitz, [Wednesday,February 07 2024]

நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் இன்று விஷால் தொடக்க இருக்கும் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் விஷால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அரசியல் சார்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்.

More News

ரஜினி உள்பட பிரபலங்களின் பட இசையமைப்பாளர் காலமானார். திரையுலகம் இரங்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'நான் அடிமை இல்லை' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 71. சென்னையில் அவர் காலமான

கமல்ஹாசனின் அடுத்த தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் - லோகேஷ் கனகராஜ்.. சூப்பர் அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. மீண்டும் இணையும் செல்வராகவன் - தனுஷ்..!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான வெற்றி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரஜினியின் 'லால் சலாம்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில்

விஜய்யின் அரசியல் கட்சியை கலாய்த்தாரா நடிகர் வடிவேலு? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

விஜய்யின் அரசியல் கட்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் வடிவேலு 'அவ்வளவுதான், போதும், வாங்க இங்கிட்டு' என்று காமெடியாக கூறியதை அவர் விஜய்யை கலாய்த்து உள்ளதாக ரசிகர்கள்