விஷால்-பாண்டியராஜ் படம் 50% முடிந்தது

  • IndiaGlitz, [Tuesday,September 08 2015]

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்த 'பாயும் புலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.


'பாயும் புலி' படத்தை அடுத்து பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. 'பாயும் புலி' படத்தை போலவே இந்த படமும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

'மெட்ராஸ்' நாயகி கேதரின் தெரசா நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். இவரை விஷால்தான் 'ஆம்பள' படத்தில் அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மீதி படப்பிடிப்புகள் விரைவில் முடிக்கப்பட்டு, படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து விஷால் 'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் ஒரு படமும் அதனையடுத்து லிங்குசாமி இயக்கும் 'சண்டக்கோழி 2' படத்திலும் நடிக்கவுள்ளார்.

More News

ஆர்யாவின் 'யட்சன்'. ஒரு முன்னோட்டம்

ஆர்யா, கிருஷ்ணா, நடிப்பில் யூடிவி நிறுவனம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் திரைப்படம் 'யட்சன்'. இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்...

வெற்றிகரமான 'விஜய் 59 'பட தலைப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜில்லா' ...

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் திரையுலகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

'சஞ்சய் தத்'தின் எளிமையை அஜீத்திடம் பார்த்தேன். ராகுல் தேவ்

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இறுதிக்க

5 மொழிகளில் ரீமேக் ஆகிறதா ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்?

ரீமேக் ராஜா என்ற பெயரை கடந்த பல வருடங்களாக பெற்றிருந்த ஜெயம் ராஜாவின் சொந்த ஸ்கிரிப்டில் உருவான 'தனி ஒருவன்' பெற்ற மிகப்பெரிய வெற்றியால்...