close
Choose your channels

விஷால்-பாண்டியராஜ் படம் 50% முடிந்தது

Tuesday, September 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்த 'பாயும் புலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.


'பாயும் புலி' படத்தை அடுத்து பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. 'பாயும் புலி' படத்தை போலவே இந்த படமும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

'மெட்ராஸ்' நாயகி கேதரின் தெரசா நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். இவரை விஷால்தான் 'ஆம்பள' படத்தில் அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மீதி படப்பிடிப்புகள் விரைவில் முடிக்கப்பட்டு, படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து விஷால் 'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் ஒரு படமும் அதனையடுத்து லிங்குசாமி இயக்கும் 'சண்டக்கோழி 2' படத்திலும் நடிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment