தேர்தலுக்கு முன்பே வாக்குறுதியை நிறைவேற்றிய பாண்டவர் அணி
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாண்டவர் அணியும் சரத்குமார் அணியும் தங்கள் அணியின் வெற்றிக்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பாண்டவர் அணியினர் 42 வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த 42 வாக்குறுதிகளில் ஒன்றினை தேர்தலுக்கு முன்பே பாண்டவர் அணி நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
பாண்டவர் அணியினர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 40வது வாக்குறுதியாக, 'SRM நிறுவனர் திரு.பச்சமுத்து அவர்கள் மூலம் நமது உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகள் வாங்கித்தரப்படும்' என்று கூறப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்று பாண்டவர் அணியினர் திரு.பச்சமுத்து அவர்களை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
பாண்டவர் அணியின் கோரிக்கையை கவனத்துடன் கேட்ட திரு.பச்சமுத்து அவர்களின் வேண்டுகோளை ஏற்று SRM மருத்துவமனைகளில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ சேவையும் இலவசக் கல்வியும் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளார்.
பாண்டவர் அணி வேண்டுகோளை ஏற்று SRM ஆஸ்பிடல்களில் இலவச மருத்துவ சேவையும் இலவசக்கல்வியும்வழங்க பாரிவேந்தர் ஒப்புதல்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com