விஷால்-லைகா நிறுவனம் இடையிலான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Saturday,March 12 2022]
விஷால் மற்றும் லைக்கா நிறுவனம் இடையிலான வழக்கில் இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
நடிகர் விஷால் தனது நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்காக அன்புசெழியனிடம் வாங்கிய கடனை லைக்கா நிறுவனத்திடம் செலுத்துமாறு கோரியதாகவும், அந்த கடனை லைக்கா நிறுவனம் செலுத்தியதியதாகவும் தெரிகிறது.
இந்த பணத்தை லைக்கா நிறுவனத்திற்கு விஷால் திருப்பிக் கொடுக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடன் தொகையை செலுத்தாமல் ’வீரமே வாகை சூடும்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின் முடிவில் மூன்று வாரங்களில் ரூபாய் 15 கோடி நிரந்தர வைப்புநிதியாக நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று வாரங்களில் இந்த தொகையை செலுத்தியதற்கான ரசீதை சமர்ப்பிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.