நான் எம்.எல்.ஏ-க்களை விட அதிகமாக சம்பாதிப்பவன்: விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலும் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய மனு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய நடிகர் விஷால் ஆர்.கே.நகரில் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது;
எனக்கு அரசியல் தொழில் அல்ல , அரசியலில் நான் சம்பாதிக்கவும் வரவில்லை. நான் ஓரு நடிகன், நான் எம்.எல்.ஏ-க்களை விட அதிகம் புகழ் பெற்றவன். அவர்களை விட அதிகமாக சம்பாதிப்பவன். நான் அரசியலை தொழிலாக செய்ய வேண்டிய தேவையில்லை. ஆர்.கே. நகர் தேர்தல் நடக்கும் போது என்னால் வீட்டில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியில் தேர்தல் களத்தில் நடப்பதை பார்த்துக்கொண்டு , இப்படி தான் என்னுடைய சமூதாயம் இருக்க போகிறது என்ற சொல்ல தோன்றவில்லை. நான் வீட்டிலிருந்து வெளியே வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தேன். வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். வேட்பு மனுக்கு கையெழுத்துக்கள் தேவைப்பட்டது. அவற்றை சரியான நபர்களிடம் வாங்கி தான் தாக்கல் செய்தேன். ஆனால் நான் வேட்புமனு தாக்கல் செய்தது பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆர்.கே நகரில் நிறைய ரசிகர் மன்றங்கள் உள்ளன.
தேர்தல் ஆணையத்தை என்னுடைய வேட்பு மனுவை நிராகரிக்க வைத்ததின் மூலம் நான் தான் வெற்றி பெற்றிருப்பேன் என்பதை எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பது தான் உண்மை. நான் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பேனா இல்லையா என்பது அடுத்த விஷயம் தான். குடியரசு வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனு இதுவரை நிராகரிக்கப்பட்டதில்லை. என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகு நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று உறுதியாக முடிவு செய்துவிட்டேன். அவர்களால் தான் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன். அவர்களுக்கு நன்றி என்று கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout