தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷால் உதவி

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால், அவ்வப்போது நலிந்த நடிகர்களுக்கும், பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருவதை அவ்வப்போது பார்த்துள்ளோம்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் வசித்து வரும் 25 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. தங்களுடைய மொத்த உடமைகளையும் தீயில் பறிகொடுத்து உதவியின்றி தவித்து வந்த அந்த குடும்பங்களுக்கு விஷால் தற்போது உதவி செய்துள்ளார்.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களில் குழந்தைகள் உட்பட 216 பேர்களுக்கு தேவையான உணவு , போர்வை , சமையலுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். விஷாலின் இந்த உடனடி உதவியால் பயனடைந்த மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து அவரை வாழ்த்தினர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்து கொடுக்க தயாராக இருப்பதாகவும் விஷால் கூறியுள்ளார். நேதாஜி நகர் மக்களுக்கு உதவும் பணிகளை அம்மக்களோடு இருந்து நடிகர் விஷாலின் குழுவினர் கவனித்து வருகின்றனர்.

More News

சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் எம்பி தலைமையில் தேர்தல் ஆணையத்திடம் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கூவத்தூர் எம்.எல்.ஏக்கள் சொல்லி கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள். பார்த்திபன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு என கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருசிலர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்து வருகின்றனர்.

குண்டர் சட்டத்தில் ஒரு மாதம் சிறையில் அடையுங்கள். முதல்வருக்கு சுப்பிரமணியன்சுவாமி கோரிக்கை

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழர்களை பொறுக்கி என்று கூறி வாங்கிக்கட்டி கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் சசிகலாவைத்தான் முதல்வர் பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பியதோடு, கவர்னருக்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்றும் அறிவித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

அரசியலில் நுழைய இதுதான் சரியான நேரமா? என்ன முடிவெடுப்பார் இளையதளபதி?

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை அடுத்து மிகச்சிறப்பான ஓப்பனிங் வசூல் மற்றும் வெளிநாட்டு வசூல் என்றால் அது இளையதளபதி விஜய் படத்திற்குத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். திருவிழா நாளாக இல்லாமல் இருந்தாலும் விஜய் படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் திருவிழாவாக மாற்றிவிடுவார்கள்...

சபாநாயகருடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சிக்கு நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெட்டுப்பு கோர உள்ளார். பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகரின் ரோல் மிகவும் முக்கியம். அவர் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக நடக்கும்...