வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் அலுவலகம் விரைந்தார் விஷால்
- IndiaGlitz, [Tuesday,December 05 2017]
சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நடிகர் விஷாலின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் திமுக இணைந்து தேர்தல் அதிகாரியை வலியுறுத்தியதை சற்றுமுன் பார்த்தோம். இதனால் அவருடைய வேட்புமனு பரிசீலனை இன்று மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த செய்தியின்படி விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். விஷாலுக்கு முன்மொழிந்தவர்கள் பெயர்கள் தவறாக இருந்ததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அறிந்த விஷால் தற்போது தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜெ.தீபாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.