வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் அலுவலகம் விரைந்தார் விஷால்

  • IndiaGlitz, [Tuesday,December 05 2017]

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நடிகர் விஷாலின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் திமுக இணைந்து தேர்தல் அதிகாரியை வலியுறுத்தியதை சற்றுமுன் பார்த்தோம். இதனால் அவருடைய வேட்புமனு பரிசீலனை இன்று மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன்  வெளிவந்த செய்தியின்படி விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். விஷாலுக்கு முன்மொழிந்தவர்கள் பெயர்கள் தவறாக இருந்ததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள்  வெளிவந்துள்ளது.

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அறிந்த விஷால் தற்போது தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜெ.தீபாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம்: தமிழக அரசின் புதிய அரசாணை

தமிழக திரையரங்குகளில் கிட்டத்தட்ட ஒரு டிக்கெட்டின் அளவிற்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.. குறிப்பாக ஒருசில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மணிகணக்கில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்த நிலை

'தளபதி 62' படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 62; படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

விஷாலுக்கு வாழ்த்து கூறி வம்பில் மாட்டிக்கொண்ட குஷ்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சுயேட்சைகளும் இந்த முறை அதிகளவில் போட்டியிடுகின்றனர்.

ஆர்.கே.நகர் தேர்தல்: தீபா வேட்புமனு நிராகரிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்புடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

விஷால் வேட்புமனுவை திடீரென நிறுத்தி வைத்த தேர்தல் அதிகாரி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த முறை அரசியல் கட்சி வேட்பாளர்களை விட சுயேட்சை வேட்பாளர்கள் தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.