விஷால் அடுத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,January 16 2024]

நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ’ரத்னம்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ள தயாரிப்பு நிறுவனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களின் ஒருவர் விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் தற்போது அவர் ஹரியின் இயக்கத்தில் ’ரத்னம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்ததும் அவர் ‘துப்பறிவாளன் 2’ படத்தை முடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷால் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிப்பதாக பைவ் ஸ்டார் நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ ’ஆடுகளம்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகிர்தண்டா’ ’ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்தார் பைவ் ஸ்டார் கதிரேசன் அவர்கள் அடுத்ததாக விஷாலுடன் இணைய உள்ளார் என்று அறிவிப்பு விஷால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த படத்தின் மற்ற விவரங்கள் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.