close
Choose your channels

விஷாலின் பிரமாண்டமான பான்-இந்தியா படம்: இயக்குனர் யார் தெரியுமா?

Thursday, December 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்து வரும் ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே.

அதேபோல் விஷால் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷாலின் பான் - இந்தியா திரைப்படம் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும், இந்த படம் தமிழ், தெலுங்கு உள்பட பல இந்திய மொழிகளில் உருவாகும் பான் - இந்தியா படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் வினோத்குமார் அவர்கள் தயாரிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த ’எனிமி’ திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலின் 33வது படமாக அமையும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment