close
Choose your channels

ஜெயம் ரவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்?

Tuesday, July 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். தற்போது அனல் அரசு தலைமையில் இந்த படத்தின் கிளளமாக்ஸ் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இந்த படப்பிடிப்பில் விஷால் பிசியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஷாலுடன் கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, சூரி, மாரிமுத்து உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஆயுதபூஜை தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விஷால் நடிக்கவுள்ள அடுத்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக் படம் என்பதும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் உதவியாளராக இருந்த வெங்கட்மோகன் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி நடித்த 'போகன்' பட இயக்குனர் லட்சுமணனுடன் விஷால் ஒரு படத்தில் இணையவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment