close
Choose your channels

மூன்றே மாதத்தில் முடிகிறது விஷாலின் அடுத்த படம்.. விறுவிறுப்பான படப்பிடிப்பில் இயக்குனர்..!

Thursday, July 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷாலின் அடுத்த திரைப்படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஷாலின் 34 வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கான டீசர் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை இல்லாத அளவில் மிகவும் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஃபேமிலி சென்டிமென்ட் காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க, தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பதை பார்த்தோம். அதேபோல் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் அவர் பாடல் கம்போசிங் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டுக்குள் ’விஷால் 34’ படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment