மூன்றே மாதத்தில் முடிகிறது விஷாலின் அடுத்த படம்.. விறுவிறுப்பான படப்பிடிப்பில் இயக்குனர்..!

  • IndiaGlitz, [Thursday,July 20 2023]

விஷாலின் அடுத்த திரைப்படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஷாலின் 34 வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கான டீசர் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை இல்லாத அளவில் மிகவும் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஃபேமிலி சென்டிமென்ட் காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க, தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பதை பார்த்தோம். அதேபோல் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் அவர் பாடல் கம்போசிங் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டுக்குள் ’விஷால் 34’ படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

More News

விஜய்சேதுபதி படத்தில் சிவகார்த்திகேயன்? 'மாவீரன்' வெற்றிவிழாவில் அவரே தெரிவித்த தகவல்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி அசரீரி குரல் கொடுத்த நிலையில் விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஆசை என 'மாவீரன்' வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன்

சூர்யாவின் 'கங்குவா': சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு… Ind VS Pak போட்டிகள் எப்போது?

6 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் எங்கே நடைபெற இருக்கிறது

தல தோனியின் 'எல்ஜிஎம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள 'எல்ஜிஎம்' என்ற தமிழ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வேறொரு ஆணுடன் ஆபாச படத்தில் நடித்த மனைவி… சொகுசு கார் பரிசளித்த பிரபல யூடியூபர்???

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் தன்னுடைய மனைவி வேறொரு ஆணுடன் ஆபாச படத்தில் நடித்ததை உற்சாகப்படுத்தி அவருக்கு சொகுசு கார்