'விஷால் 34' படத்தின் சூப்பர் அப்டேட் வெளியிட்ட விஷால்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,October 18 2023]

விஷால் நடித்து வரும் 34வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ’விஷால் 34’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் முடிவு பெற்றதாகவும், சரியாக படப்பிடிப்பு முடிவு பெற்ற போது மழை வந்து எங்களை வாழ்த்தியது போல் உணர்கிறேன் என்றும் பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு நடத்திய இடத்தில் மழை பெய்யும் புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஷால் ஜோடியாக பிரியா பவானிசாகர் நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ’தாமிரபரணி’ ’பூஜை’ ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக ஹரி மற்றும் விஷால் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி.ஆகிய இருவரும் இந்த படத்தில் சமீபத்தில் இணைந்தனர் என்பது தெரிந்ததே.