புனித் ராஜ்குமார் நினைவாக விஷால்-ஆர்யா செய்த பெருமைக்குரிய செயல்!

  • IndiaGlitz, [Tuesday,November 02 2021]

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென காலமானது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஷால், ஆர்யா நடித்த ’எனிமி’ திரைப்படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடந்த போது பேசிய விஷால், ‘தனது நண்பர் புனித் ராஜ்குமார் மறைவு தான் எதிர்பாராதது என்றும் அவர் 1800 குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வந்த நிலையில் அந்த குழந்தைகளின் கல்விச் செலவு பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் விஷால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கிரீன் இந்தியா சேலஞ்ச் அமைப்பிற்காக நேற்று ஹைதராபாத்தில் செடி ஒன்றை நட்ட விஷால், அந்த செடிக்கு ஸ்ரீபுனித் ராஜ்குமார் என்று பெயர் வைத்தது பெருமைக்குரிய செயலாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது விஷாலுடன் அவருடைய நண்பரும் ’எனிமி’ நடிகருமான ஆர்யாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

விஷால் நடித்த ’எனிமி’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் ’வீரமே வாகை சூடும்’ ‘லத்தி’ மற்றும் ’துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.